
திருச்செந்தூர் இடைத்தேர்தலில் 100 கோடி ரூபாய் செலவழித்து தி.மு.க., வெற்றி பெற்றதாக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டினார். தூத்துக்குடியில் அவர்" பெரியாறு அணை பிரச்னையில், கேரளா மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, என் தலைமையில் வரும் 27ம் தேதி தேனியிலும், பிப்., 9ல் மதுரையிலும் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். விவசாயிகளை பாதிக்கும் மரபணு மாற்ற கத்திரிக்காய்க்கு அனுமதி வழங்கக் கூடாது. மத்திய, தமிழக அரசுகளின் செயல்பாடுகளால் விவசாயிகள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் 100 கோடி ரூபாய் செலவழித்து தி.மு.க., வெற்றிபெற்றது. யாரை ஊழல்வாதி என்றனரோ, யார் மீது சொத்துக்குவிப்பு வழக்கு போட்டனரோ, அவரையே வேட்பாளராக நிறுத்தி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற வைத்தனர்.சட்டசபை பொதுத்தேர்தலிலும் இதுபோன்று வெற்றிபெறலாம் என்ற அவர்களின் கனவு பலிக்காது. நிகர்நிலை பல்கலை, பிரச்னையில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மத்திய அரசு இறுதி முடிவெடுக்க வேண்டும்"என்றார் வைகோ.
No comments:
Post a Comment