Pages

Friday, January 22, 2010

80 ஆயிரம் யான் (ரூ. 5 லட்சத்து 21 ஆயிரத்து 400) அபராதம் விதிக்கப்பட்டது.


சீனாவின் முன்னாள் மாணவர் தலைவர் ஷூயூ யோன்ஜுன். கடந்த 1989-ம் ஆண்டு பெய்ஜிங் நகரில் சீன அரசுக்கு எதிராக தியானமென் சதுக்கத்தில் ஜனநாயகம் கோரி போராட்டம் நடத்தியவர்.

கடந்த ஆண்டு (2009) செப்டம்பர் மாதம் இவர் ஹாங்காங் நகருக்கு சென்றார். அப்போது போலி பெயரில் சென்றதால் கைது செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு 80 ஆயிரம் யான் (ரூ. 5 லட்சத்து 21 ஆயிரத்து 400) அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஹாங்காங் அரசு அதிகாரிகள் அவரை சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக் கப்பட்டது.

இது சீன அரசின் பழி வாங்கும் நடவடிக்கை. தியானமென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment