Pages

Saturday, January 23, 2010

மாலைதீவு அதிபர் சந்திப்பு


சென்னையில் இன்று முதல்- அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மாலத்தீவின் அதிபர் முகமதுநஷீது சந்தித்து பேசினார். அதன்பிறகு முகமதுநஷீது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் " இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் தலைவரை சந்தித்ததில் பெருமைக் கொள்கிறேன். தமிழகத்துக்கும், மாலத்தீவுக்கும் இடையே எவ்வகையில் ஒத்துழைப்பு நல்குவது என்பது குறித்து முதல்- அமைச்சருடன் விவாதித்தேன். இந்த சந்திப்பு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது " என்றார்.

அப்போது 'கோவையில் நடைபெற இருக்கிற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் மாலத்தீவின் சார்பில் கலந்து கொள்ள அழைப்பு ஏதும் விடுக்கப்பட்டதா?' என்று நிருபர் ஒருவர் கேட்டார்.

அதற்கு பதில் அளிக்கையில், 'முதல்- அமைச்சர் அதற்காக அழைப்பு விடுத்தார். அதை ஏற்று எனது தலைமையில் ஒரு குழு நிச்சயமாக மாநாட்டில் கலந்து கொள்ளும் 'என்று முகமதுநஷீது கூறினார்

No comments:

Post a Comment