
மெக்சிகோ நாட்டில் உள்ள டுராங்கோ நகர ஜெயிலில் 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் போதை மருந்து கும்பலை சேர்ந்த பலரும் இருந்தனர். இவர்கள் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர்.
அவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. ஜெயிலுக்குள் கிடந்த பொருட்களை எடுத்து ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.
இதில் 23 கைதிகள் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஜெயில் காவலர்களும், போலீசாரும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்தவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதே ஊரில் உள்ள மற்றொரு ஜெயிலில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 19 கைதிகள் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் களுக்குள் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது உண்டு. அவர்களுக்குள் நடக்கும் மோதல் மற்றும் அவர்களால் நடத் தப்படும் தாக்குதல்களில் மட்டும் 2006-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நாட்டில் போதை மருந்து தொழில் பெரிய அளவில் நடப்பதால் அதை ஒடுக்குவதற்கு மட்டுமே 40 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment