
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் தமன்னா. சூர்யா ஜோடியாக நடித்த அயன், பரத்ஜோடியான கண்டேன் காதலை, ஆனந்ததாண்டவம் படங்கள் கடந்த வருடம் ரிலீசாயின.
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் “பையா” படம் அடுத்த மாதம் வெளியாகிறது. தற்போது ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, விஜய் ஜோடியாக “சுறா” படங்களில் நடித்து வருகிறார்.
கமலை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் புதுபடத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியா கியுள்ளன. கமல் ஜோடியாக நடிக்க தமன்னாவுக்கு ரூ.1 1/4கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது அவர் "கமல் ஜோடியாக ஒரு படத்தில் நான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், கமலுடன் நடிக்க ரூ.1 கோடியே 25 லட்சம் சம்பளம் கேட்டதாகவும் வெளியான செய்தி பார்த்து அதிர்ச்சியானேன். இதுமாதிரி செய்தியை யார் பரப்பி விட்டார்கள் என்று புரியவில்லை. கமல் படத்தில் நடிப்பது பற்றி இதுவரை யாரும் என்னை அணுகி கேட்கவில்லை.
சம்பளத்தைநான் உயர்த்தி விட்டதாக விமர்சிக்கின்றனர். கடந்த வருடம் எனது எல்லா படங்களுமே ஹிட்டாயின. தொடர்வெற்றி படங்கள் கொடுத்த நான் சம்பளத்தை உயர்த்துவதில் என்ன தவறு இருக்கிறது.
என்னிடம் திறமை இருப்பதால் படவாய்ப்புகள் வருகிறது. திறமை இல்லாமல் யாராவது அதிக சம்பளம் தருவார்களா? எனக்கு எந்த அளவு மார்க்கெட் உள்ளதோ அந்த அளவு சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளேன்" என்றார்.
No comments:
Post a Comment