Pages

Sunday, January 3, 2010

3 இடியட்ஸ் படத்தின் கதைக்கு ஆங்கில எழுத்தாளர் ஒருவர் உரிமை

பாலிவுட்டில் வெளியாகி வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் 3 இடியட்ஸ் படத்தின் கதைக்கு ஆங்கில எழுத்தாளர் ஒருவர் உரிமை கொண்டாடுகிறார். அமீர்கான், கரீனா கபூர் நடித்துள்ள 3 இடியட்ஸ் படத்தை டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். ‌‌படம் வெளியான முதல் வாரத்திலேயே கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் 3 இடியட்ஸ் கதைக்கு உரிமை கோரியிருக்கிறார் பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத். அவர் "நான் எழுதிய பைவ் பாயிண்ட் சம் ஒன் என்ற நாவலை மையமாக வைத்துதான் 3 இ‌டியட்ஸ் படத்தை எடுத்துள்ளனர். எனது கதையை திருடியிருக்கிறார்கள். எனவே கதைக்கான தொகையை எனக்கு தர வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment