
தமிழ், மலையாள படங்களில் கலக்கிய அசின் இந்தியில் “கஜினி” மூலம் உச்சிக்கு போனார். ஒரே படத்தில் உலகம் முழுவதும் ரசிகர்கள் திரண்டார்கள். இரண்டாவது படம் சல்மான்கானுடன் ஜோடி சேர்த்தது. பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களில் அசினை கதாநாயகியாக்கும்படி நிர்ப் பந்தம் செய்தனர். அசின் வீட்டில் தயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் “கியூ” கட்டி நின்றனர். அசின் தந்தை தோட்டம்கல், தலை கால் புரியாமல் இருந்தார். வந்த தயாரிப்பாளர்களை மரியாதை இல்லாமல் நடத்தி நிற்க வைத்தே பேசி அனுப்பினார்.
அப்படி வாழ்ந்த அசின் இப்போது பட வாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம். “லண்டன் டிரீம்ஸ்” படம் தோல்வியானதால் புதுப்பட வாய்ப்புகள் நின்று போனது. தயாரிப்பாளர்களும் வருவது இல்லை. இதனால் மீண்டும் தமிழ், மலையாள பட உலகுக்கு திரும்பி விடும் முடிவில் இருக்கிறார் என்கின்றனர். இதுபற்றி அசினிடம் கேட்டபோது, மார்க்கெட் போனதை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் " இந்தியில் எனக்கு படங்கள் இல்லாமல் சும்மா இருக்கிறேன் என்று புரளி கிளப்புகின்றனர். சில படங்கள் கதை விவாதத்தில் உள்ளது. இன்னும் சில படங்கள் படப்பிடிப்புக்கு தயாராக உள்ளது. எனவே கைவசம் படமே இல்லை என்பதெல்லாம் பொய். இவ் வருடம் நிறைய இந்திப் படங்களில் நடிக்கிறேன்.
எனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறார் கள். அவருக்கு நல்ல மனம் இருக்க வேண்டும். திடமான மனதுக்காரராக இருப்பது முக்கியம். ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் நான் இருக்கிறேன் என்று ஓடோடி வந்து நிற்க வேண்டும். வெளி அழகையெல்லாம் நான் பார்க்கமாட்டேன் "என்றார்.
No comments:
Post a Comment