Pages

Saturday, January 23, 2010

சாவு எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள ஜோஷ் நகரில் இருபிரிவினருக்கு இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இந்த கலவரத்தை அந்நாட்டு போலீசாரும், ராணுவத்தினரும் அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடக்கத்தில் கலவரத் தில் இறந்தவர்கள் 150 என கணக்கிடப்பட்டது.

தற்போது சாவு எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. கலவரம் நடந்த ஜோஷ் நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆங்காங்கே பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன.

ஜோஷ் நகரில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து மட்டும் 150 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 18 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment