
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றிய வர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விருதுகளில் பாரத ரத்னா விருது மிக உயரிய விருதாகும்.
பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகளும் பத்ம விருதுகளில் அடங்கும். இந்த விருதுக்காக ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் சிறந்த சேவையாளர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அந்த பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து விருதுக்கு உரிய வர்களை தேர்வு செய்யும்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து பத்மவிருதுகளுக்காக 20 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இருந்து மூன்றில் ஒரு பங்கு பேர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் நடிகர் விஜய் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (திங்கள்) வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் மேலிடம் நடிகர் விஜய்யை சேர்க்க திட்டமிட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் அது நடைபெறவில்லை.
No comments:
Post a Comment