
அ.தி.மு.க. கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கிராம, நகர, வட்ட அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
சுமார் 1 1/2 லட்சம் பேர் அ.தி.மு.க.வின் பகுதி செயலாளர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர் கள் மற்றும் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட கிராம, நகர, வட்ட அ.தி.மு.க. பகுதி செயலாளர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கையெழுத் திட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகியின் பெயரையும், பதவியையும் குறிப்பிட்டு, நீங்கள் இந்தந்த பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள். அ.தி. மு.க.வின் வளர்ச்சிக்கு சோர்வின்றி வெற்றிகரமாக பாடுபட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கட்சி மேலிட தலைவர் ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க.வின் நிர்வாகிகளாக செயல்பட கட்சி தொண்டர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். புதிய நிர்வாகிகளை உற்சாகபடுத்தும் வகையில் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் தனிப்பட்ட முறையில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
நிர்வாகிகள் உற்சாகமாக கட்சிக்கு பாடுபட இது ஊக்கமாக அமையும். அ.தி.மு.க. வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். புதிய நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட இது போன்ற கடிதங்கள் தூண்டு கோலாக அமையும் என்றார்.
No comments:
Post a Comment