
"ரஜினியின் மாப்பிள்ளை “ரீமேக்” படத்தில் நடிக்கிறேன். ஸ்ரீவித்யா கேரக்டரில் எனக்கு மாமியாராக நடிக்க மனிஷா கொய்ராலாவிடம் பேசி உள்ளனர். அனேகமாக அவர்தான் நடிப்பார் என்று நினைக்கிறேன். ஒரே மாதிரி கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சிக்கிறேன். அது மாதிரி கதைகளைதான் தேர்வு செய்கிறேன்.
கதை பற்றி ரஜினியிடம் ஆலோசனை கேட்பதில்லை. நானும் என் மனைவியும் மானேஜரும் முடிவு செய்கிறோம். எனக்கு இந்தியன் புரூஸ்லி என்பது போன்ற பட்டங்கள் சூட்டுவதை விரும்பவில்லை. ரசிகர்கள் அன்பு மிகுதியில் அது போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டுவதை என்னால் தடுக்க முடியவில்லை.
நானும், சிம்புவும் சேர்ந்து நடிக்க வேண்டுமானால் அதற்கான கதை, இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாம் எதிர்பார்த்தப்படி அமைய வேண்டும். அப்படி அமைவது அபூர்வமான விஷயம். அது அமைந்தால் சேர்ந்து நடிக்கத்தயார்.
நான் கஸ்தூரிராஜா வாரிசு என்று சொன்னதை கேட்டு ரஜினி வருத்தப்பட்டதாக சொல்வது தவறு. அவர் என்னை அழைத்து பெருமைப்பட்டார். “குட்டி” படம் எல்லோரும் ரசிக்கும் வகையில் வந்துள்ளது. படம் நன்றாக “ஓடுகிறது. “ஆடுகளம்” படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகிறது " ரஎன்றார்.
No comments:
Post a Comment