Pages

Friday, January 1, 2010

கங்கையில் வீசப்படும் சடலங்கள்

- (the river goddess )உத்தர பிரதேசத்தில் கேட் பாரற்ற சடலங்களை ஒரு தன்னார்வ அமைப்புசடங்குகள் செய்து தகனம் செய்துவருகிறது. இதனால், கங்கையில் அனாதைப் பிணங்களை வீசுவது குறைகிறது.உத்தரபிரதேசத்தில் கான்பூரை சேர்ந்த சமாஜ் கல்யாண் சேவா சமிதி என்ற அமைப்பு, கேட்பாரற்ற சடலங்களுக்கு அந்தந்த மத சம்பிரதாயப்படி சடங்கு செய்து தகனம் செய்து வருகிறது.


இது குறித்து, கான்பூர் டி.ஐ.ஜி., ஜோக்தாண்ட் கூறியதாவது:எங்கள் பகுதிக்குட்பட்ட இடங்களில் கிடக்கும் சடலங்களை ஆய்வு செய்து யாரும் அந்த சடலத்தை கோரவில்லையென்றால், கங்கை நதியில் வீசி விடுவது வழக்கம். பொதுவாக யாரும் கேட்காத அனாதைப் பிணங்களுக்கு அந்திமக்கிரியை செலவாக மாநில அரசு, போலீசுக்கு 500 ரூபாய் தான் தருகிறது. எனவே, கேட்பாரற்ற நிலையில் இறந்து போனவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்ய அந்தப் பணம் போதாது; அதனால் அம்மாதிரி சடலங்களை துணியைச் சுற்றி மூடி கங்கையில் எறிந்து விடுகின்றனர். தற்போது சமாஜ் கல்யாண் சேவா அமைப்பினர் இந்த தொண்டை செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


சமாஜ் கல்யாண் சேவா அமைப்பின் தலைவர் தனிராவ் பவுத் குறிப்பிடுகையில், " அனாதை சடலங்கள் கங்கை நதியில் வீசப்படுவதை பார்த்து என் மனம் பதைக்கும். உடலிலிருந்து உயிர் போய்விட்டால் மனித உடல் குப்பையை போல வீசப்படுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்ய முடிவு செய்தேன். கடந்த ஆண்டு 400சடலங்களுக்கு இந்து முறைப் படியும், 66 சடலங்களுக்கு முஸ்லிம் மதப்படியும் இறுதி சடங்கு செய்தோம். எங்கள் அமைப்பினர் ஒவ்வொரு பகுதியாக சென்று அனாதை சடலங்களைப் பற்றி எனக்கு தகவல் கொடுப்பார்கள்' என்றார்.

No comments:

Post a Comment