Pages

Monday, January 25, 2010

ஆஸ்திரேலியாவில் போலீஸ் தடுமாற்றம்


ஆஸ்திரேலியாவில் பஞ்சாப் மாநில இளைஞர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் துப்பு கிடைக்காமல் அந்நாட்டு போலீசார் தவிக்கின்றனர். இதற்காக அவர்கள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.ஆஸ்திரேலியாவில் ஏராளமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட நூறு இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் பஞ்சாப் மாநில மாணவர்கள் நிதின் கார்க் மற்றும் ரஞ்ஜோத்சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர்.


மெல்போர்னில் தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு செல்லும் வழியில் பஞ்சாப் இளைஞர் நிதின் கார்க் குத்தி கொல்லப்பட்டார். இவர், கடைசியாக ரயில் நிலையம் வழியாக நடந்து சென்றதை போலீசார் ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியை பார்த்து விசாரித்து வருகின்றனர். எப்படி கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? என்ற விவரம் தெரியவில்லை.இதே போல கடந்த மாதம் 29ம் தேதி ரஞ்ஜோத் சிங் என்பவர் கழுத்து நெரிக்கப்பட்டு பல முறை கத்தியால் குத்தப்பட்டு கடைசியில் எரித்து கொல்லப்பட்டுள்ளார். இவரது விஷயத்தில் இன்னும் துப்பு துலங்கவில்லை.


இது குறித்து தகவல் அளிக்கும் படி பொது மக்களிடம் போலீசார் கோரியுள்ளனர். கடைசியாக அவரிடம் பேசிய நபர்கள் குறித்தோ அல்லது கொலை சம்பவம் நடக்கும் போது அந்த வழியாக யாராவது சென்றிருந்தால் அதுபற்றியோ தகவல் கொடுக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுவரை துப்பு கிடைக்காததால் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment