Pages

Wednesday, January 20, 2010

அசோக் நகரில் ஆடிட்டர் மனைவி கொலை - ஆட்டோ டிரைவருக்கு வலை ?

அசோக் நகரில் ஆடிட்டர் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜிம் பயிற்சி யாளர் உட்பட 50க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இதற்கிடையில், 16 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளை போனதும் தெரியவந்துள்ளது.
சென்னை அசோக் நகரில் வசிப்பவர் தியாகராஜ சுப்பிரமணியம் (45), ஆடிட்டர். இவரது மனைவி கலா (42). தினமும் காலையில் கணவனும் மகனும் சென்றபிறகு4வது அவென்யூவில் உள்ள ஜிம் முக்கு கலா செல்வார். நேற்று முன்தினம் ஜிம்முக்கு சென்ற கலா, பிற்பகல் 1.30க்கு வீடு திரும்பிய சிறிது நேரத்தில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 5 தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
கலா தனது தோழி (32) ஒருவரையும் ஜிம்முக்கு அழைத்து சென்றுள்ளார். தோழிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் விபத்தில் பாதிக்கப்பட்டதால், வீட்டிலேயே சிகிச்சை பெறுகி றார். அப்போது கலாவின் தோழிக்கும் ஜிம் பயிற்சியாளருக்கும் (24) நெருக்கம் அதிகமாகியுள்ளது.

இருவரும் அடிக்கடி வெளியிலும் சந்தித்தனர். இதனால் ஜிம்மில் இருந்து இருவரும் நீக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்படி, கே.கே.நகர் போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்தனர். இது தொடர்பாக கலாவும் போலீசில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உறவினரிடம் உதவி கேட்டுள்ளார்.
ஜிம் பயிற்சியாளர், அவரது நண்பர் இருவரையும் மணலியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நள் ளிரவு தனிப்படையினர் பிடித்தனர். அவர்களிடமும், கலாவின் தோழியிடமும் விசாரணை நடக்கிறது. சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர், கருப்பாக, திடகாத்திரமாக இருந்தார் என்று அக்கம்பக்கத்தினர் கூறினர். அவர் ஜிம் பயிற்சியாளராகவோ அல்லது ஜிம்முக்கு வந்து செல்ப வராகவோ இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. பழக்கமானவர்கள்தான் இந்த கொலையை நடத்தியிருக்க வேண்டும் என போலீசார் நம்புகின்றனர்.
கார் இல்லாத நேரத்தில் ஆட்டோவில்தான் கலா செல்வார். வழக்கமாக, ஒரே ஆட்டோவில் சென்றாரா? ஜிம்முக்கு அருகில் யாராவது தெரிந்த ஆட்டோக்காரர்கள் உள்ளார்களா? என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

கலாவின் வீட்டில் கைப்பற்றிய கொலையாளியின் செருப்பை, ஜிம் பயிற்சியாளர்களின் கால்களில் போட்டுப் பார்த்தபோது அது பொருந்தவில்லை. செருப்பின் மாடல்களை வைத்து பார்க்கும்போது, கொலையாளி சாதாரண தொழிலாளியாக இருக்கலாம் என்று தெரிகிறது. அதனால், கொலையாளி ஆட்டோ டிரைவராக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கலா பியூட்டி பார்லருக்கு செ ன்று வருவார் என்பதால், அது குறித்தும் விசாரணை நடக்கிறது. கலா, ஜிம்முக்குச் செல்லும்போது தாலியை கழற்றி வைத்து விட்டு செல்வார். அவரது 10 சவரன் தாலி செயின், 6 சவரன் வளையல், அவரது கை பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை காண வில்லை என்பது இப்போது தெரிந்துள்ளது.
கொலையை திசை திருப்ப எடுத்து செல்லப்பட்டதா? கொள்ளையர்கள்தான் கொலை செய்தார்களா எனத்தெரியவில்லை.
வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணின் மகன் உட்பட 50 பேரிடம் போலீசார் துருவி துருவி விசாரிக்கின்றனர். கடைசியாக ஜிம்மில் இருந்து வீட்டுக்கு வந்த ஆட்டோ டிரைவரைத்தான் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment