Pages

Wednesday, January 20, 2010

சீனாவில் அவதார் படத்திற்கு தடை


உலகம் முழுவதும் வசூலை குவித்து வரும் அவதார் திரைப்படத்துக்கு சீன அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் 2டி படத்தை திரையிட முடியாது. 3டி அவதார் மட்டுமே திரையிடப்படும்.அரசு நிறுவனமான சீனா பிலிம் குழுமம், அவதார் திரைப்படத்தை உள்நாட்டில் திரையிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. கடந்த 12ம் தேதி வரையில் அவதார் திரைப்பட வசூல் சீனாவில் மட்டும் ரூ.203 கோடியைத் தாண்டி உள்ளது. இந்நிலையில், 24ம் தேதி முதல் 2டி வர்ஷனை திரையிடக் கூடாது என தியேட்டர் உரிமையாளர்களுக்கு சீனா பிலிம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. எனினும், 3டி மற்றும் ஐமேக்ஸ் வர்ஷன் தொடர்ந்து திரையிடலாம் என கூறியுள்ளது.

சீன அரசு, கட்டுமான நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்குவதற்காக நாட்டின் பல பகுதியில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வேறு இடத்துக்கு மாற்றி வருகிறது. இதை அங்குள்ள மக்கள் எதிர்த்து வருகிறார்கள். அவதார் படக் கதையும் ஏறக்குறைய இதே போல் இருப்பதால் கிளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சீன அரசு கருதுகிறது. கட்டுப்பாடு விதிப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். சீனா பிலிம் குழுமம், 'பயோபிக் ஆப் கன்பூசியஸ்' திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. தவிர, இன்னும் பல சீன திரைப்படங்களும் திரையிடப்பட்டுள்ளன. இவற்றுக்கான போட்டியை குறைப்பதற்காக அவதார் திரைப்படத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment