
தமிழ்த் திரையுலகில் 1980களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை, வண்டிச்சக்கரம் போன்ற ஒருசில படங்கள் தவிர அனைத்து படங்களிலுமே அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி விருந்து படைத்தார். சில்க் ஸ்மிதாவின் ஆட்டம் இருந்தால்தான் படம் ஓடும். அவருக்கு என ரசிகர் பட்டாளம் இருந்தது. கமலுடன் ஆடிய நேத்து ராத்திரி யம்மா பாடல் இன்றும் கிளு கிளுப்பூட்டக் கூடியது. பின்னர் காதல், மது என வாழ்வு திசை மாறியது. அன்புக்காக ஏங்கிய அவரை பலர் போலியாக காதலித்து ஏமாத்தினர். சொத்துக்களையும் பிடுங்கினார்கள். இறுதியில் வாழ்வில் வெறுப்படைந்து தூக்கில் தொங்கி இறந்தார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தி, தமிழில் ஏக்தாகபூர் படத்தை தயாரிக்கிறார். மிலன்ருத்ரியா இயக்குகிறார். சில்க்ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேசி உள்ளனர்.அவர் யோசித்து சொல்வதாக சொல்லியிருக்கிறார்.அனால் அவர் சில்க் ஸ்மிதா பாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வமாய் இருப்பதை தெரிகிறது.முதலில் தூக்கு பின் கொலை என பேசப்பட்டு கடைசியில் அவர் தூக்கு போட்டு இறந்ததாக போலீஸ் வழக்கைமுடித்தது ?

- நெருப்பன்.
No comments:
Post a Comment