சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருக்கும் ஆபாச வீடியோவை அவரது முன்னாள் சீடர் லெனின் வெளியிட்டு இருந்தார். இது நித்யானந்தாவின் ஆதரவாளர்கள், சீடர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆபாச சி.டி.யில் இருப்பது தான்தான் என்பதை நித்யானந்தா ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆசிரம பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
நித்யானந்தாவின் லீலைகள் நடந்தது பெங்களூர் ஆசிரமம் என்பதால் தமிழக போலீசார் வழக்குகள் அனைத்தையும் பெங்களூர் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர்.
சீடர் லெனினுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு உள்பட 2 வழக்குகள் மட்டுமே தமிழக போலீசார் பதிவு செய்துள்ளனர்.
கடந்த வாரம் சீடர் லெனினிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதில் சாமியார் நித்யானந்தாவின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகுக்கு தெரிவிக்கவே சி.டி.யை வெளியிட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக தன்னுடன் நித்யானந்தா சமரச பேச்சு நடத்தியதாகவும் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். இதையடுத்து இதற்கு ஆதாரமாக நித்யானந்தாவுக்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடல்கள் முழு விவரமும் அடங்கிய ஆடியோ சி.டி.யை லெனின் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இது தொடர்பான வழக்கு தமிழக போலீசாரிடம் இருப்பதால் நித்யானந்தாவின் ஆடியோ உரையாடல்கள் அடங்கிய சி.டி. தமிழக போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Wednesday, April 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment