பொது இடங்களில் மொபைல் போனிலோ, நேரிலோ யாரையாவது ஆபாசமாகவோ, அருவருப்பாகவோ திட்டினால் அபராதம் வசூலிக்க வகை செய்யும் சட்டம் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கோபத்தால் சிலரை வாய்க்கு வந்த படி திட்டுவது, ஆபாசமாக பேசுவது போன்றவை காலம் காலமாக நடக்கிறது. உலகம் முழுவதும் இந்த பிரச்னை பொதுவாக காணப்படுகிறது.
இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட ரஷ்ய அரசு புதிய சட்ட மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளது.ரஷ்ய பார்லிமென்ட்டின் மேல் சபையில் இந்த சட்ட மசோதா கடந்த வாரம் அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பொது இடங்களில் ஆபாசமாக பேசினால் அபராதம் விதிக்கும் திட்டம் கடந்த 2005ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள பெல்கோராட் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது.
கடுமையான அபராதத்தால் இந்த மாகாண மக்கள் கெட்ட வார்த்தைகளை அடியோடு மறந்து போய் விட்டனர். இந்த திட்டம் நல்ல பலனை கொடுத்ததால், நாடு முழுவதும் இந்த சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பொது இடங்களில் ஒரு நபர் உபயோகிக்கும் வார்த்தையின் ஆபாசம் அல்லது கொடூர தன்மைக்கு ஏற்ப 800 ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க, இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது.
முதல் கட்டமாக ஆபாச வார்த்தைகள் என்னென்ன என்ற பட்டியலிடப்பட்டு இந்த வார்த்தைகளையெல்லாம் உபயோகிக்கக்கூடாது. ஆபாச வார்த்தை அல்லது கொடூரமான சொற்களை பயன்படுத்த தோன்றும் போது அதற்கு பதிலாக "மன்னித்து விடுங்கள்' என்னை தொல்லை செய்யாதீர்கள்' போன்ற வார்த்தைகளை பேசுங்கள், என கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப் பட்டு வருகிறது.இந்தியாவில் இதுபோன்ற சட்டம் கொண்டு வந்தால், பலர் தங்கள் மாத சம்பளத்தை அபராதத்தி லேயே இழக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment