ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து அமெரிக்கா நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்ட மற்றொரு விமானத்தில், பயணித்த நைஜீரிய வாலிபர் கழிவறையில் நீண்ட நேரம் இருந்ததால் சந்தேகமடைந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் புகார் செய்தனர். வலுகட்டாயமாக கழிவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த நைஜீரிய வாலிபர் பயணிகளையும், விமான ஊழியர்களையும் சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார்.
இதையடுத்து, விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கியதும் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில், அவர் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கழிவறையில் ஒரு மணி நேரம் தங்கியிருந்தது தெரிய வந்தது. எனவே, இந்த நபர் பயங்கரவாத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவரல்ல, என எப்.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment