பாகிஸ்தானில் தலிபான் தளபதி ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். 11 பயங்கரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தான் பகுதியில் தலிபான்கள் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக சுவாட் பள்ளத்தாக்கில் அவர்களது ஆதிக்கம் அதிகமுள்ளது. எனவே, இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
சார்பாக் என்ற இடத்தில் நடந்த சண்டையில் தலிபான் தளபதிகளில் ஒருவரான சித்திக் என்பவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அவனுடைய கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப் பற்றப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் நடந்த பல் வேறு நாசவேலைகளில் சித்திக் சம்பந்தப் பட் டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழங்குடிகள் அதிகம் உள்ள கைபர் பகுதியில் ஷெர் அலி என்ற தலிபான் அமைப்பின் முக்கிய பிரமுகர் உட்பட ஒன்பது பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment