உலக அமைதிக்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லோ நகரில் நேற்று நடந்தது. விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட 13 பேர் கலந்து கொண்டு விருதை பெற்றனர். நோபல் பரிசு விழா முடிந்ததும் அப்பரிசு பெற்றவரை கவுர விக்கும் வகையில் நார்வே நாட்டு மன்னர் ஹரால்டு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த விருந்தில் நோபல் பரிசு பெற்ற 12 பேர் கலந்து கொண்டனர். ஆனால், அதில் கலந்து கொள்ளாமல் அதிபர் ஒபாமா புறக்கணித்தார்.
மேலும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தைகளின் கலைநிகழ்ச்சி, இசைக்கச்சேரி உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.
இது நார்வே நாட்டு மன்னர் ஹரால்டை அவமதிப்பதாக உள்ளது என அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன.
No comments:
Post a Comment