பல மணி நேரம் காத்திருந்த பல தமிழக ஊழியர்களுக்குக் காத்திருந்ததன் பலன் கிட்டியது நேற்று.
மரினா பராஜைப் பார்வையிட வந்திருந்தார் தமிழ் நாட்டின் துணை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின். அவருடன் சென்னை மேயர் உட்பட பல அதிகாரிகளும் வந்திருந்தனர்.
திரு ஸ்டாலினைப் பார்ப்பதற்காக ஒரு சிறிய கூட்டமே மரினா பராஜில் கூடிவிட்டது.
அனைவருக்கும் புன்முறுவலிட்டு, கை கொடுத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார் திரு ஸ்டாலின்.
சென்னையின் கூவம் நதியைச் சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது தமிழக அரசு.
“சென்னை நதிகளைச் சுத்தப்படுத்துவது தமிழ் நாட்டு முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு. அதை நிறைவேற்ற அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது,’’ என்றார் திரு ஸ்டாலின்.
கூவம் நதியைச் சுத்தப்படுத்தி சென்னையை மறக்கமுடியாத ஒரு நகரமாக மாற்ற திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment