தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரின் மையப்பகுதியிலிருந்த மத்திய சிறையைப் புழல் பகுதிக்கு மாற்றியதால் ஏற்பட்ட 13.28 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை அரசு பொது மருத்துவமனையின் விரிவாக்கத்திற்காக முதல்- அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்து ஆணையிட்டிருந்தார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை 175 ஆண்டு கால பாரம்பரியம்மிக்கது இம்மருத்துவமனை இந்த ஆண்டு 175-ம் ஆண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. 2722 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையுடன் இணைந்து சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரம் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக இம்மருத்துவ மனைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனை 30 ஏக்கர் நிலத்தில் உள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து உலகப்புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரி பழைய கட்டிடங்களிலேயே இதுவரையில் இயங்கி வருகின்றது.
எனவே தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட பத்து ஏக்கர் நிலத்தில், தற்போதுள்ள சென்னை அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் 100 ஆண்டுகள் பழமையானது என்பதாலும், பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து செல்வதில் ஏற்படும் இடர் பாடுகளைகளையும் விதத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரிக்காக புதிய அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டலாம் என முதல்-அமைச்சர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment