எனது இல்லத்தில் குண்டு வீசியது தொடர்பாக தீவிரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் எனது மன மார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிடிப்பட்ட 3 பேரும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள். தடை செய்யப்பட்ட தீவிரவாதத்துக்கு ஆதரவாக பேசியதால்தான் அந்த இயக்கத்தின் தலைவர் வெளிநாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பல நேரங்களில் தீவிரவாதத்துக்கு ஆதரவாக அவர் பேசி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின்போது என்னை எதிர்த்து பிரசாரம் செய்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, முதல்- அமைச்சர் கருணாநிதி ஆகியோரையும் விமர்சித்து தாக்கி பேசி உள்ளார்.
என்னை தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்டு பேசி உள்ளார். உலக மக்கள் அனைவரும் தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டு வருகிறார்கள். அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment