
டைரக்டர் பாலா தான் இயக்கும் படத்தின் கதையை படத்தின் சூட்டிங் முடியும் வரை ஹீரோ உள்ளட்ட யாரிடமும் சொல்ல மாட்டார். இதை தனது பாலிஸியாகவே வைத்திருக்கும் பாலா அடுத்து இயக்கவுள்ள படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாதான் தயாரிப்பாளர். கதையை கேட்காமல் நடிப்பதில்லை என்ற பாலிஸியை வைத்திருக்கும் விஷால், டைரக்டர் பாலாவிடம் கதை கேட்டிருக்கிறார். விஷாலின் குடும்ப படம் என்பதால் வேறு வழியின்றி பாலிஸியை தளர்த்தி விஷாலிடம் கதை சொல்லியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் இன்னொரு ஹீரோ ஆர்யா. நான் கடவுள் படத்தின்போது பாலாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கதை கேட்காமலேயே புதிய படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் ஆர்யா.
What a sacrifice Aarya. You will be next Kamalahasan in stage acting.
ReplyDelete