கோலாலம்பூர், அக். 26: மலேசியாவில் கண்ணாடிகளால் கட்டப்பட்ட ஹிந்து கோயில் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஜோகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில், 90 சதவீதத்திற்கும் மேல் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டுள்ளனர்.87 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், முழுவதும் புனரமைக்கப்பட்டு கண்ணாடிகளால் கட்டப்பட்ட பின்பு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இக்கோயிலின் முகப்பில் புத்தர் கோயில்களில் இருப்பது போல வைக்கப்பட்டுள்ள சுழலும் விளக்கில் இருந்து வெளியே வரும் ஒளி கண்ணாடிகளில் பட்டு பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும் என கோயிலின் தலைவர் எஸ்.சின்னதம்பி கூறினார். நீலம், பச்சை, மஞ்சள், வெள்ளை என பல்வேறு வண்ணங்களைக் கொண்ட 3 லட்சம் கண்ணாடித் துண்டுகளைப் பயன்படுத்திக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இதனை முக்கிய சுற்றுலாத் தலமாக அறிவிக்க மாநில சுற்றுலாத் துறையிடம் கேட்டுக்கொள்ளப்படும் என உள்ளூர் அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.கோயிலுக்கு மாநில அரசு இதுவரை ரூ.1.37 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Dhuruvan Mariyappa from malayasia
No comments:
Post a Comment